#விரும்பியவற்றைச் செய்யும் #ஆற்றல் தரும்
#மூலாதார # சக்கரத்தில் #உள்ள #ரகசியங்கள் .
மூலாதாரம் பற்றி சித்தர் #போகர்
---------------------------------------------
--------
ஆறு ஆதாரங்களில் ஒன்றான மூலாதாரம் ,
முதுகு தண்டுக்கு கீழ் உள்ளது. அதன்
அமைப்பை போகர் சித்தர் தனது போகர் 7000
என்ற நூலில் இப்படி கூறுகிறார்.
போகர் 7000காணவே மூலம் அஃது அண்டம்
போலக்
காரணமாய்த் திரிகோண மாக நிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளைய மாகும்
புறம்பாக இதழ் அதுவும் நாலுமாகும்
நாணவே நாற்கமலத்து அட்சரங்கள்
நலமான வ-ச-ஷ-ஸவ்வு மாகும்
மூணவே மூக்கோணத்து உள்ஒளி ஓங்கார
முயற்சியாய் அதற்குள்ளே அகாரம் ஆமே
– போகர் 7000
மூலாதாரமானது ஒரு வட்டம் போல்
இருக்குமாம் அதன் நடுவில் முக்கோணம்
ஒன்று இருக்குமாம் அதன் மேலே ஒரு
வளையமும், அதனை சுற்றிலும் நான்கு
இதழ்களும் இருக்குமாம். அந்த இதழ்களில் வ-
ச-ஷ-ஸ என்ற நான்கு எழுத்துக்கள்
இருக்குமாம். அதன் ஒரு புறத்தில் ‘உ’ காரமும்
மறுபுறத்தில் ‘அ’ காரமும் இருக்குமாம்.
அகாரத்தின் மேலாகக் கணேசர் நிற்பர்
அதிலே ஓர் கோணத்தில் உகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாம் சக்தி நிற்பாள்
ஒடுங்கியதோர் முனை ஒன்றில் கதவிப்
பூவாய்ப்
புகாரமாய் முகங்கீழ்க்குண் டலியாம் சக்தி
பெண்பாம்பு போல் சுருட்டிச் சீறிக் கொண்டு
சுகாரமாய் சுழிமுனை ஊடுருவி நிற்பாள்
துரியாதீதம் என்ற அவத்தை தானே.
– போகர் 7000
அகாரத்தில் மேலே கணேசர் நிற்பாராம் அதன்
மற்றொரு புறமான உகாரத்தின் மேல் வல்லபை
என்ற சக்தி நிற்பாளாம் இதில் வாழைப் பூவை
போல் கீழ்நோக்கி ஒன்று விரிந்திருக்கும்.
அதில் பெண் பாம்பு போல் குண்டலினி சக்தி
சுருட்டிக் கொண்டு சுழிமுனையில் ஊடுருவி
சீறிக் கொண்டு இருப்பாளாம்
அவத்தைதனக் கிருப்பிடம்மும் மூலமாகும்
அழகான கதலிப்பூ எட்டி தழாய் நிற்கும்
நவத்தைக்கு நந்தி அதன் வாயில் நிற்பார்
நற்சிவமரம் சிகார மல்லோ கோடி பானு
அவத்தைக்கு வாய் திறவாள் மலரால் மூடும்
மைந்தனே எட்டு இதழில் எட்டு சத்தி
பவத்தைக்குச் சக்தி எட்டின் பேர் ஏது என்றால்
பாங்கான அணிமவும் லகிமாத் தானே
– போகர் 7000
இதுவே மூலதாரத்தின் இருப்பிடமாகுமாம்
முக்கோணத்தின் கீழ் முனையில் உள்ள
வாழைப் பூ போன்ற அமைப்பு எட்டு
இதழ்களை கொண்டது. அந்த எட்டு இதழ்கள்
ஒவ்வொன்றிலும் எட்டு விதாமான சக்திகள்
அடங்கிஇருக்குமாம் அதன் நடுவே நந்தி
நிற்பாராம். நந்திக்கு பிறகு கோடி சூரிய
பிரகாசத்துடன் நற்சிவமும் இருக்குமாம்.
தானான மகிவாவும் கரிமா வோடு
தங்கும்ஈ சத்துவமும் வசித்து வமாகும்.
பூனான பிராத்திபிரா காம்யத் தோடு
புகழ்எட்டுத் தேவதையும் தளத்தில் நின்றே
ஏனான இதழாலே மூடிக் கொள்வார்
ஏற்றமாம் நந்தியைத் தான் காணொட்டாமல்
– போகர் 7000
அந்த எட்டு சக்திகள், அணிமா, லகிமா, மகிமா,
கலிமா, ஈசத்துவம்,வசித்துவம்,பிராப்தி
மற்றும் பிராகாமியம்மாகும் அந்த அட்டமா
சக்திகளுக்கான தேவர்கள் அங்கு நின்று
நந்தியை பார்க்க விடாமால் எட்டு இதழ்களால்
மூடிக் கொள்வார்களாம். இதுவே
மூலாதாரத்தின் அமைப்பாக #போகர் #சித்தர்
கூறுகிறார்
=========
மூலாதாரத்தை விழிக்கச் செய்ய சித்தர் போகர்
கூறுவது
போகர் 7000
மூலாதாரத்தை எப்படி விழிக்கச்செய்வத
ு என்று போகர் கூறியிருக்கிறார் இந்த பதிவில்
அதை பார்ப்போம். இதில் எனக்கு எந்த
அனுபவமும் கிடையாது நான் படித்ததை
பகிர்கிறேன். இந்த நிலைகளை அடைவது
எல்லாம் சாதாரண விஷயம் அல்ல..
வானான வஸ்துவைநீ பானம் பண்ணி
வங்ஙென்று வாங்கியுமே கும்பித்தூதே
– போகர் 7000 – 14
வஸ்துவை பானம் பண்ணி வங்கென்று
கும்பித்து மூச்சை மேலும் செலுத்து
ஊதினால்என் வாசத்து இலகி ரியாலே
உலாவுவார் இதழ் எல்லாம் திறந்து விட்டுப்
போதினால் ஆயிசொன்ன ஏவல் கேட்பார்
புகுந்து பார் நந்தி கண்டால் யோகமாகும்
வாதினால் பத்தான வருடத் துக்கும்
வாசலையே திறவாமல் மூடிக் கொள்வார்
ஏதினால் இதற்குள்ளே வாசி மாட்டே
இடத்தோடில் வங்ஙென்ன உள்ளே வாங்கே –
போகர் 7000 – 15
அப்படி ஊதினால் எட்டு சக்திகளும் இதழ்களை
திறந்துவிடுமாம். அந்த எட்டு சக்திக்கான
தேவர்கள் வெளியே வந்து உலாவுவார்கள்
என்கிறார். நம் ஏவல்களையும் செய்வார்கள்
என்று சொல்கிறார். எட்டு இதழ்களையும்
திறந்தவுடன் நந்தி தெரிவாராம்.
அவரை
கண்டதும் யோகம் வாய்க்கும் என்கிறார். இது
நிகழவேண்டும் என்றால் இடைவிடாமல்
சாதகம் செய்ய வேண்டும் பத்து வருடங்கள்
கூட செய்ய வேண்டியது வருமாம்.பின் இடது
நாசியில் வங் என்று மூச்சை வாங்கு.
வாங்கியே நந்தி தனில் யங்ஙென்று கும்பி
வலத்தோடில் சிங்ஙென்று உள்ளாக வாங்கித்
தாங்கியே யங்ஙென்று இருத்திக் கும்பி
தளமான தெருவாறும் வெளியாய்க் காணும்
ஓங்கியே மாணிக்க ஒளிபோல் தோன்றும்
உத்தமனே மூலத்தின் உண்மை காணும்
தேங்கியே வல்லபையாம் சத்தி தாணும்
சிறந்திருப்பாள் பச்சைநிற மாகத் தானே –
போகர் 7000 – 16
முச்சை உள்வாங்கி நந்தியை நினைத்து யங்
என்று கும்பித்துப்பார் வலுது நாசியில்
மூச்சை விடும்போது சிங் என்று மூச்சை
உள்ளே வாங்கி யங் என்று மூச்சை
கும்பிப்பாயாக (கும்பகம் – சிறிது நேரம்
மூச்சை நிறுத்துவது) . இப்படி
செய்யும்போது ஆறு ஆதாரங்களுக்கும்
வழித்தோன்றுமாம். மாணிக்க ஒளிப்போல்
தோன்றுமாம் மூலத்தின் உணமையும்
தெரியுமாம். பச்சை நிறமாக வலை தாய் சக்தி
காட்சித்தருவாள் என்கிறார்.
பச்சைநிற வல்லபையைப் பணிந்து போற்று
பாங்கான ஆறுக்கும் பருவம் சொல்வாள்
மொச்சையாம் மூலமது சித்தி ஆனால்
மூவுலகும் சஞ்சரித்துத் திரிய வாகும்
கச்சைநிறக் காயமுமே கனிந்து மின்னும்
கசடு அகன்றே ஆறுதலங்கண்ணில் தோன்றும்
துச்சைநிற வாதம்சொன் னபடி கேட்கும்
துரியததின் சூட்சம் எல்லாம் தோன்றும் பாரே.
– போகர் 7000 – 17
பச்சை நிற வாலை தாயை பணிந்து போற்று,
ஆறு ஆதாரங்களையும் கடப்பதற்கு உரிய
காலத்தை உனக்கு உணர்த்துவாள் என்கிறார்.
மூலம் என்ற முதல் படி சித்தியாகி விட்டாலே
மூவலகங்களிலும் சென்று திரியலாம்
என்கிறார். உடல் கனிந்து மின்னுமாம். உடலில்
படிந்துள்ள அனைத்து அழுக்குகளும் அகன்று
ஆறு ஆதாரங்களும் கண்களுக்கு
காட்சியளிக்கும் என்கிறார். துரியத்தின்
சூட்சமம் எல்லாம் தெரியும் எனகிறார்.
தூரியம் என்பது தலை உச்சியில் உள்ள ஓம்
சக்கரம்.
மூச்சுபயிற்சி மூலமாக மூலாதாரத்தை
விழிக்க செய்யும் முறையை இங்கு போகர்
கூறுகிறார். நல்ல குருவை தேர்ந்தெடுத்து
அதாவது இந்த மூச்சுபயிற்சியில் நன்கு
தேர்ந்தவர்களின் மூலம் கற்று கொள்வதே
சிறந்தது. மூச்சுபயிற்சி செய்பவர்கள்
அனைவருக்கும் இது வாய்க்கும் என்றும்
சொல்லமுடியாது ஆனால் உங்கள் உடல் நல்ல
ஆரோக்கியம் அடையும். ஒழுக்கத்துடனும்
தன்நலம் இன்றி வாழ்பவர்களுக்கு இது
கண்டிப்பாக வாய்க்கும்.
கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பின் கருவில்
இருக்கும் மனித உடலை பார்த்தால்,
சின்னஞ்சிறிய சதைப்பிண்டமாகத்தான்
இருக்கிறது. அந்தச் சிறிய சதைப்பிண்டம்
இன்று நாம் வளர்ந்திருக்கும் அளவுக்கு
தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது.
குறிப்பாக, தன்னை இதுபோல் ஆக்கிக்
கொள்ளும், குறிப்பிட்ட மென்பொருளை
பிராணமய கோஷம் அல்லது சக்தி உடல் என்று
அழைக்கலாம்.
சக்தி உடல் உருவான பிறகு, அதன்
அடிப்படையில் சரீர உடல் உருவாகிறது. சக்தி
உடலில் ஏதேனும் திரிபு இருந்தால் அது
சரீரத்திலும் வெளிப்படும். அதனால்தான்,
இந்தக் கலாசாரத்தில் ஒரு பெண்
கருவுறும்பொழுது, அவளுடைய சக்தி
உடலின் மீது தாக்கம் ஏற்படுத்தும் வகையில்
அவள் கோவிலுக்கு செல்வது,
பெரியவர்களிடம் ஆசி பெறுவது போன்ற
செய்கைகளில் ஈடுபடுத்தப்பட்டாள். கருவுற்ற
பெண் அதிர்வுமிக்க, முழுமையான சக்தி
உடலை கொண்டிருந்தால், திறமைசாலியான
மனித உயிரை அவள் ஈன்றெடுப்பாள்.
மூலாதாரம் – அஸ்திவாரம் அவசியம் சக்தி
உடலின் அஸ்திவாரம் மூலாதாரம். இது
கீழ்நிலையிலான சக்கரம், அதனால் அதனை
குறித்து எதுவும் செய்யத் தேவையில்லை
என்று மக்கள் நினைக்கத் துவங்கிவிட்டனர்.
அஸ்திவாரத்தை கவனிக்க வேண்டாம் என்று
நினைப்பவர் நிச்சயம் முட்டாள்தான்.
அஸ்திவாரம் மிக முக்கியமான ஒன்று. யோகா
செய்யும்பொழுது மூலாதாரத்தில் நாம்
மிகுந்த கவனம் செலுத்துகிறோம். இதை
உறுதிப்படுத்தினால், பிறவற்றை
உருவாக்குவது எளிது. அஸ்திவாரம்
உறுதியாக இல்லாத கட்டிடத்தை
நிலைநிறுத்த முயற்சி செய்வது, தினசரி
சர்க்கஸ் செய்வதைப் போல் இருக்கும்.
பெரும்பாலான மனிதர்களின் வாழ்விலும்
இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு
குறிப்பிட்ட அளவிலான சமநிலையில்,
நல்வாழ்வில் தன்னை நிலைநிறுத்திக்
கொள்வது பலருக்கும் சர்க்கஸ் செய்வது
போலத்தான் ஆகிவிட்டது. ஆனால், உங்கள்
மூலாதாரம் நிலையாக இருந்தால் வாழ்வோ,
சாவோ நீங்கள் சமநிலையுடன் இருப்பீர்கள்.
காரணம், உங்கள் அஸ்திவாரம் வலுவாக
இருக்கிறது, பிறவற்றை பின்னர் சரி செய்து
கொள்ளலாம். ஆனால், உங்கள் அஸ்திவாரம்
உறுதியாக இல்லாதபோது, கவலையே மிஞ்சி
நிற்கும். அனுபவ வேட்டையில் ஏற்படும்
ஆபத்துகள் அருள் தன்னை நமக்கு வழங்க
வேண்டுமென்றால், அதற்கு உகந்த உடல்
உங்களிடம் இருப்பது அவசியம். தகுந்த உடல்
இல்லாத பட்சத்தில், அருள் உங்கள் மீது
பொழிந்தால், நீங்கள் ப்யூஸ் (fuse) போய்
விடுவீர்கள். ஆழமான அனுபவங்கள் வேண்டும்
என்று பலபேர் விரும்பினாலும், தன்
உடலையும் அந்த நிலைக்கு உகந்தாற் போல்
மாற்றிக் கொள்ள அவர்கள் முயல்வதில்லை.
இந்த அனுபவ வேட்டையில், தன் உடல்
நொந்து, புத்தி பேதலித்து போன பலரையும்
இவ்வுலகில் நம்மால் காண முடிகிறது.
யோகாவில் நீங்கள் அனுபவத்தின் பின்
போவதில்லை, மாறாக அனுபவத்திற்கு
உங்களைத் தயார் செய்வது அவசியம்.
ஆதியோகியின் முதல் ஏழு சீடர்களான
சப்தரிஷிகளும் இப்படித்தான் தங்களை
ஆயத்தப்படுத்திக் கொண்டனர். 84 வருடங்கள்
தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டே
இருந்தனர். அவர்கள் எதையும்
யாசிக்கவில்லை. அவர்கள் நிலையைக் கண்ட
ஆதியோகி, தன் அருளை முழுமையாக
அவர்களுக்கு வாரி வழங்கினார். ஆனால்,
இன்றைய உலகம் எப்படி இருக்கிறது
தெரியுமா? “2 நாட்கள் நான் இங்கு
இருக்கப் போகிறேன், எனக்கு ஞானோதயம்
வழங்க முடியுமா?” எனக் கேட்கிறார்கள். யோக
முறைகள் எப்பொழுதும் மூலாதார சக்கரத்தில்
கவனம் செலுத்துகின்றன. சமீப
காலமாகத்தான், பயிற்சியே இல்லாத யோகிகள்
தங்கள் புத்தகங்களில், மேலே உள்ள
சக்கரங்களில் கவனம் செலுத்துங்கள் என்று
சொல்லி வருகின்றனர். இந்த மேலே கீழே
விஷயம் புத்தகம் படிக்கும் மனங்களில்
ஆழமாக பதிந்துவிட்டது. ஆனால், வாழ்க்கை
இவ்விதத்தில் வேலை செய்வதில்லை. சில
வருடங்களுக்கு முன் நான் 2 அல்லது 3 நாள்
ஹடயோகா வகுப்புகள் எடுத்துக்
கொண்டிருந்தேன். வெறுமனே ஆசனங்கள்
செய்வதன் மூலமே, மக்கள் வெடித்து பரவச
நிலையில் சிரிப்பார்கள், அழுவார்கள். பல
யோகிகள் தங்கள் தடைகளை உடைக்க, சில
எளிய ஆசன நிலைகளைப் பயன்படுத்துவார்
கள். ஹடயோகா வேலை செய்வது
இப்படித்தான். யோகா என்றால் சமநிலை.
சமநிலை என்றால் தெளிந்த புத்தி என்று
அர்த்தமில்லை. உங்கள் வாழ்க்கை வளமாக
இருக்க வேண்டுமென்றால், உங்களுக்குள்
கொஞ்சம் பித்துநிலை இருப்பது அவசியம்.
ஆனால், பலவந்தத்தினால் நீங்கள்
பைத்தியமனால், வாழ்க்கையை முழுமையாக
தொலைத்து விடுவீர்கள். நான் சமநிலை பற்றி
பேசும்பொழுது தெளிந்த புத்திநிலையைப்
பற்றிப் பேசவில்லை. தெளிந்த
புத்திநிலைக்கும், பைத்தியக்காரத்த
னத்துக்கும் இடையே உள்ள அந்த நிலையைக்
கண்டறிந்து அதில் நுழைந்து, சாகசம்
செய்வதைப் பற்றி பேசுகிறேன்.
பித்துநிலை
என்பது ஒரு சாகசம்.
கட்டுப்பாட்டில் இருக்கும்
வரை பித்துநிலை என்பது ஒரு அற்புதமான
விஷயம். கட்டுப்பாட்டினை இழந்தாலோ அது
அசிங்கமாகிவிடும். அதுபோல, தெளிந்த
புத்தியும் அழகான விஷயம்தான், ஆனால்
முழுமையான நிதானத்துடன் இருந்தால்,
இறந்து போனவருக்கும் உங்களுக்கும் பெரிதாக
வித்தியாசம் ஒன்றும் இருக்காது. நீங்கள்
விரும்பியவற்றில், நீங்கள் விரும்பிய
போதெல்லாம் நுழைந்து, சாகசம் செய்யும்
ஆற்றல் உங்களுக்கு கிட்ட, உங்கள் மூலாதாரம்
உறுதியுடன் இருப்பது அவசியம்.
www.supremeholisticinstitute.com
#மூலாதார # சக்கரத்தில் #உள்ள #ரகசியங்கள் .
மூலாதாரம் பற்றி சித்தர் #போகர்
---------------------------------------------
--------
ஆறு ஆதாரங்களில் ஒன்றான மூலாதாரம் ,
முதுகு தண்டுக்கு கீழ் உள்ளது. அதன்
அமைப்பை போகர் சித்தர் தனது போகர் 7000
என்ற நூலில் இப்படி கூறுகிறார்.
போகர் 7000காணவே மூலம் அஃது அண்டம்
போலக்
காரணமாய்த் திரிகோண மாக நிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளைய மாகும்
புறம்பாக இதழ் அதுவும் நாலுமாகும்
நாணவே நாற்கமலத்து அட்சரங்கள்
நலமான வ-ச-ஷ-ஸவ்வு மாகும்
மூணவே மூக்கோணத்து உள்ஒளி ஓங்கார
முயற்சியாய் அதற்குள்ளே அகாரம் ஆமே
– போகர் 7000
மூலாதாரமானது ஒரு வட்டம் போல்
இருக்குமாம் அதன் நடுவில் முக்கோணம்
ஒன்று இருக்குமாம் அதன் மேலே ஒரு
வளையமும், அதனை சுற்றிலும் நான்கு
இதழ்களும் இருக்குமாம். அந்த இதழ்களில் வ-
ச-ஷ-ஸ என்ற நான்கு எழுத்துக்கள்
இருக்குமாம். அதன் ஒரு புறத்தில் ‘உ’ காரமும்
மறுபுறத்தில் ‘அ’ காரமும் இருக்குமாம்.
அகாரத்தின் மேலாகக் கணேசர் நிற்பர்
அதிலே ஓர் கோணத்தில் உகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாம் சக்தி நிற்பாள்
ஒடுங்கியதோர் முனை ஒன்றில் கதவிப்
பூவாய்ப்
புகாரமாய் முகங்கீழ்க்குண் டலியாம் சக்தி
பெண்பாம்பு போல் சுருட்டிச் சீறிக் கொண்டு
சுகாரமாய் சுழிமுனை ஊடுருவி நிற்பாள்
துரியாதீதம் என்ற அவத்தை தானே.
– போகர் 7000
அகாரத்தில் மேலே கணேசர் நிற்பாராம் அதன்
மற்றொரு புறமான உகாரத்தின் மேல் வல்லபை
என்ற சக்தி நிற்பாளாம் இதில் வாழைப் பூவை
போல் கீழ்நோக்கி ஒன்று விரிந்திருக்கும்.
அதில் பெண் பாம்பு போல் குண்டலினி சக்தி
சுருட்டிக் கொண்டு சுழிமுனையில் ஊடுருவி
சீறிக் கொண்டு இருப்பாளாம்
அவத்தைதனக் கிருப்பிடம்மும் மூலமாகும்
அழகான கதலிப்பூ எட்டி தழாய் நிற்கும்
நவத்தைக்கு நந்தி அதன் வாயில் நிற்பார்
நற்சிவமரம் சிகார மல்லோ கோடி பானு
அவத்தைக்கு வாய் திறவாள் மலரால் மூடும்
மைந்தனே எட்டு இதழில் எட்டு சத்தி
பவத்தைக்குச் சக்தி எட்டின் பேர் ஏது என்றால்
பாங்கான அணிமவும் லகிமாத் தானே
– போகர் 7000
இதுவே மூலதாரத்தின் இருப்பிடமாகுமாம்
முக்கோணத்தின் கீழ் முனையில் உள்ள
வாழைப் பூ போன்ற அமைப்பு எட்டு
இதழ்களை கொண்டது. அந்த எட்டு இதழ்கள்
ஒவ்வொன்றிலும் எட்டு விதாமான சக்திகள்
அடங்கிஇருக்குமாம் அதன் நடுவே நந்தி
நிற்பாராம். நந்திக்கு பிறகு கோடி சூரிய
பிரகாசத்துடன் நற்சிவமும் இருக்குமாம்.
தானான மகிவாவும் கரிமா வோடு
தங்கும்ஈ சத்துவமும் வசித்து வமாகும்.
பூனான பிராத்திபிரா காம்யத் தோடு
புகழ்எட்டுத் தேவதையும் தளத்தில் நின்றே
ஏனான இதழாலே மூடிக் கொள்வார்
ஏற்றமாம் நந்தியைத் தான் காணொட்டாமல்
– போகர் 7000
அந்த எட்டு சக்திகள், அணிமா, லகிமா, மகிமா,
கலிமா, ஈசத்துவம்,வசித்துவம்,பிராப்தி
மற்றும் பிராகாமியம்மாகும் அந்த அட்டமா
சக்திகளுக்கான தேவர்கள் அங்கு நின்று
நந்தியை பார்க்க விடாமால் எட்டு இதழ்களால்
மூடிக் கொள்வார்களாம். இதுவே
மூலாதாரத்தின் அமைப்பாக #போகர் #சித்தர்
கூறுகிறார்
=========
மூலாதாரத்தை விழிக்கச் செய்ய சித்தர் போகர்
கூறுவது
போகர் 7000
மூலாதாரத்தை எப்படி விழிக்கச்செய்வத
ு என்று போகர் கூறியிருக்கிறார் இந்த பதிவில்
அதை பார்ப்போம். இதில் எனக்கு எந்த
அனுபவமும் கிடையாது நான் படித்ததை
பகிர்கிறேன். இந்த நிலைகளை அடைவது
எல்லாம் சாதாரண விஷயம் அல்ல..
வானான வஸ்துவைநீ பானம் பண்ணி
வங்ஙென்று வாங்கியுமே கும்பித்தூதே
– போகர் 7000 – 14
வஸ்துவை பானம் பண்ணி வங்கென்று
கும்பித்து மூச்சை மேலும் செலுத்து
ஊதினால்என் வாசத்து இலகி ரியாலே
உலாவுவார் இதழ் எல்லாம் திறந்து விட்டுப்
போதினால் ஆயிசொன்ன ஏவல் கேட்பார்
புகுந்து பார் நந்தி கண்டால் யோகமாகும்
வாதினால் பத்தான வருடத் துக்கும்
வாசலையே திறவாமல் மூடிக் கொள்வார்
ஏதினால் இதற்குள்ளே வாசி மாட்டே
இடத்தோடில் வங்ஙென்ன உள்ளே வாங்கே –
போகர் 7000 – 15
அப்படி ஊதினால் எட்டு சக்திகளும் இதழ்களை
திறந்துவிடுமாம். அந்த எட்டு சக்திக்கான
தேவர்கள் வெளியே வந்து உலாவுவார்கள்
என்கிறார். நம் ஏவல்களையும் செய்வார்கள்
என்று சொல்கிறார். எட்டு இதழ்களையும்
திறந்தவுடன் நந்தி தெரிவாராம்.
அவரை
கண்டதும் யோகம் வாய்க்கும் என்கிறார். இது
நிகழவேண்டும் என்றால் இடைவிடாமல்
சாதகம் செய்ய வேண்டும் பத்து வருடங்கள்
கூட செய்ய வேண்டியது வருமாம்.பின் இடது
நாசியில் வங் என்று மூச்சை வாங்கு.
வாங்கியே நந்தி தனில் யங்ஙென்று கும்பி
வலத்தோடில் சிங்ஙென்று உள்ளாக வாங்கித்
தாங்கியே யங்ஙென்று இருத்திக் கும்பி
தளமான தெருவாறும் வெளியாய்க் காணும்
ஓங்கியே மாணிக்க ஒளிபோல் தோன்றும்
உத்தமனே மூலத்தின் உண்மை காணும்
தேங்கியே வல்லபையாம் சத்தி தாணும்
சிறந்திருப்பாள் பச்சைநிற மாகத் தானே –
போகர் 7000 – 16
முச்சை உள்வாங்கி நந்தியை நினைத்து யங்
என்று கும்பித்துப்பார் வலுது நாசியில்
மூச்சை விடும்போது சிங் என்று மூச்சை
உள்ளே வாங்கி யங் என்று மூச்சை
கும்பிப்பாயாக (கும்பகம் – சிறிது நேரம்
மூச்சை நிறுத்துவது) . இப்படி
செய்யும்போது ஆறு ஆதாரங்களுக்கும்
வழித்தோன்றுமாம். மாணிக்க ஒளிப்போல்
தோன்றுமாம் மூலத்தின் உணமையும்
தெரியுமாம். பச்சை நிறமாக வலை தாய் சக்தி
காட்சித்தருவாள் என்கிறார்.
பச்சைநிற வல்லபையைப் பணிந்து போற்று
பாங்கான ஆறுக்கும் பருவம் சொல்வாள்
மொச்சையாம் மூலமது சித்தி ஆனால்
மூவுலகும் சஞ்சரித்துத் திரிய வாகும்
கச்சைநிறக் காயமுமே கனிந்து மின்னும்
கசடு அகன்றே ஆறுதலங்கண்ணில் தோன்றும்
துச்சைநிற வாதம்சொன் னபடி கேட்கும்
துரியததின் சூட்சம் எல்லாம் தோன்றும் பாரே.
– போகர் 7000 – 17
பச்சை நிற வாலை தாயை பணிந்து போற்று,
ஆறு ஆதாரங்களையும் கடப்பதற்கு உரிய
காலத்தை உனக்கு உணர்த்துவாள் என்கிறார்.
மூலம் என்ற முதல் படி சித்தியாகி விட்டாலே
மூவலகங்களிலும் சென்று திரியலாம்
என்கிறார். உடல் கனிந்து மின்னுமாம். உடலில்
படிந்துள்ள அனைத்து அழுக்குகளும் அகன்று
ஆறு ஆதாரங்களும் கண்களுக்கு
காட்சியளிக்கும் என்கிறார். துரியத்தின்
சூட்சமம் எல்லாம் தெரியும் எனகிறார்.
தூரியம் என்பது தலை உச்சியில் உள்ள ஓம்
சக்கரம்.
மூச்சுபயிற்சி மூலமாக மூலாதாரத்தை
விழிக்க செய்யும் முறையை இங்கு போகர்
கூறுகிறார். நல்ல குருவை தேர்ந்தெடுத்து
அதாவது இந்த மூச்சுபயிற்சியில் நன்கு
தேர்ந்தவர்களின் மூலம் கற்று கொள்வதே
சிறந்தது. மூச்சுபயிற்சி செய்பவர்கள்
அனைவருக்கும் இது வாய்க்கும் என்றும்
சொல்லமுடியாது ஆனால் உங்கள் உடல் நல்ல
ஆரோக்கியம் அடையும். ஒழுக்கத்துடனும்
தன்நலம் இன்றி வாழ்பவர்களுக்கு இது
கண்டிப்பாக வாய்க்கும்.
கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட பின் கருவில்
இருக்கும் மனித உடலை பார்த்தால்,
சின்னஞ்சிறிய சதைப்பிண்டமாகத்தான்
இருக்கிறது. அந்தச் சிறிய சதைப்பிண்டம்
இன்று நாம் வளர்ந்திருக்கும் அளவுக்கு
தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது.
குறிப்பாக, தன்னை இதுபோல் ஆக்கிக்
கொள்ளும், குறிப்பிட்ட மென்பொருளை
பிராணமய கோஷம் அல்லது சக்தி உடல் என்று
அழைக்கலாம்.
சக்தி உடல் உருவான பிறகு, அதன்
அடிப்படையில் சரீர உடல் உருவாகிறது. சக்தி
உடலில் ஏதேனும் திரிபு இருந்தால் அது
சரீரத்திலும் வெளிப்படும். அதனால்தான்,
இந்தக் கலாசாரத்தில் ஒரு பெண்
கருவுறும்பொழுது, அவளுடைய சக்தி
உடலின் மீது தாக்கம் ஏற்படுத்தும் வகையில்
அவள் கோவிலுக்கு செல்வது,
பெரியவர்களிடம் ஆசி பெறுவது போன்ற
செய்கைகளில் ஈடுபடுத்தப்பட்டாள். கருவுற்ற
பெண் அதிர்வுமிக்க, முழுமையான சக்தி
உடலை கொண்டிருந்தால், திறமைசாலியான
மனித உயிரை அவள் ஈன்றெடுப்பாள்.
மூலாதாரம் – அஸ்திவாரம் அவசியம் சக்தி
உடலின் அஸ்திவாரம் மூலாதாரம். இது
கீழ்நிலையிலான சக்கரம், அதனால் அதனை
குறித்து எதுவும் செய்யத் தேவையில்லை
என்று மக்கள் நினைக்கத் துவங்கிவிட்டனர்.
அஸ்திவாரத்தை கவனிக்க வேண்டாம் என்று
நினைப்பவர் நிச்சயம் முட்டாள்தான்.
அஸ்திவாரம் மிக முக்கியமான ஒன்று. யோகா
செய்யும்பொழுது மூலாதாரத்தில் நாம்
மிகுந்த கவனம் செலுத்துகிறோம். இதை
உறுதிப்படுத்தினால், பிறவற்றை
உருவாக்குவது எளிது. அஸ்திவாரம்
உறுதியாக இல்லாத கட்டிடத்தை
நிலைநிறுத்த முயற்சி செய்வது, தினசரி
சர்க்கஸ் செய்வதைப் போல் இருக்கும்.
பெரும்பாலான மனிதர்களின் வாழ்விலும்
இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு
குறிப்பிட்ட அளவிலான சமநிலையில்,
நல்வாழ்வில் தன்னை நிலைநிறுத்திக்
கொள்வது பலருக்கும் சர்க்கஸ் செய்வது
போலத்தான் ஆகிவிட்டது. ஆனால், உங்கள்
மூலாதாரம் நிலையாக இருந்தால் வாழ்வோ,
சாவோ நீங்கள் சமநிலையுடன் இருப்பீர்கள்.
காரணம், உங்கள் அஸ்திவாரம் வலுவாக
இருக்கிறது, பிறவற்றை பின்னர் சரி செய்து
கொள்ளலாம். ஆனால், உங்கள் அஸ்திவாரம்
உறுதியாக இல்லாதபோது, கவலையே மிஞ்சி
நிற்கும். அனுபவ வேட்டையில் ஏற்படும்
ஆபத்துகள் அருள் தன்னை நமக்கு வழங்க
வேண்டுமென்றால், அதற்கு உகந்த உடல்
உங்களிடம் இருப்பது அவசியம். தகுந்த உடல்
இல்லாத பட்சத்தில், அருள் உங்கள் மீது
பொழிந்தால், நீங்கள் ப்யூஸ் (fuse) போய்
விடுவீர்கள். ஆழமான அனுபவங்கள் வேண்டும்
என்று பலபேர் விரும்பினாலும், தன்
உடலையும் அந்த நிலைக்கு உகந்தாற் போல்
மாற்றிக் கொள்ள அவர்கள் முயல்வதில்லை.
இந்த அனுபவ வேட்டையில், தன் உடல்
நொந்து, புத்தி பேதலித்து போன பலரையும்
இவ்வுலகில் நம்மால் காண முடிகிறது.
யோகாவில் நீங்கள் அனுபவத்தின் பின்
போவதில்லை, மாறாக அனுபவத்திற்கு
உங்களைத் தயார் செய்வது அவசியம்.
ஆதியோகியின் முதல் ஏழு சீடர்களான
சப்தரிஷிகளும் இப்படித்தான் தங்களை
ஆயத்தப்படுத்திக் கொண்டனர். 84 வருடங்கள்
தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டே
இருந்தனர். அவர்கள் எதையும்
யாசிக்கவில்லை. அவர்கள் நிலையைக் கண்ட
ஆதியோகி, தன் அருளை முழுமையாக
அவர்களுக்கு வாரி வழங்கினார். ஆனால்,
இன்றைய உலகம் எப்படி இருக்கிறது
தெரியுமா? “2 நாட்கள் நான் இங்கு
இருக்கப் போகிறேன், எனக்கு ஞானோதயம்
வழங்க முடியுமா?” எனக் கேட்கிறார்கள். யோக
முறைகள் எப்பொழுதும் மூலாதார சக்கரத்தில்
கவனம் செலுத்துகின்றன. சமீப
காலமாகத்தான், பயிற்சியே இல்லாத யோகிகள்
தங்கள் புத்தகங்களில், மேலே உள்ள
சக்கரங்களில் கவனம் செலுத்துங்கள் என்று
சொல்லி வருகின்றனர். இந்த மேலே கீழே
விஷயம் புத்தகம் படிக்கும் மனங்களில்
ஆழமாக பதிந்துவிட்டது. ஆனால், வாழ்க்கை
இவ்விதத்தில் வேலை செய்வதில்லை. சில
வருடங்களுக்கு முன் நான் 2 அல்லது 3 நாள்
ஹடயோகா வகுப்புகள் எடுத்துக்
கொண்டிருந்தேன். வெறுமனே ஆசனங்கள்
செய்வதன் மூலமே, மக்கள் வெடித்து பரவச
நிலையில் சிரிப்பார்கள், அழுவார்கள். பல
யோகிகள் தங்கள் தடைகளை உடைக்க, சில
எளிய ஆசன நிலைகளைப் பயன்படுத்துவார்
கள். ஹடயோகா வேலை செய்வது
இப்படித்தான். யோகா என்றால் சமநிலை.
சமநிலை என்றால் தெளிந்த புத்தி என்று
அர்த்தமில்லை. உங்கள் வாழ்க்கை வளமாக
இருக்க வேண்டுமென்றால், உங்களுக்குள்
கொஞ்சம் பித்துநிலை இருப்பது அவசியம்.
ஆனால், பலவந்தத்தினால் நீங்கள்
பைத்தியமனால், வாழ்க்கையை முழுமையாக
தொலைத்து விடுவீர்கள். நான் சமநிலை பற்றி
பேசும்பொழுது தெளிந்த புத்திநிலையைப்
பற்றிப் பேசவில்லை. தெளிந்த
புத்திநிலைக்கும், பைத்தியக்காரத்த
னத்துக்கும் இடையே உள்ள அந்த நிலையைக்
கண்டறிந்து அதில் நுழைந்து, சாகசம்
செய்வதைப் பற்றி பேசுகிறேன்.
பித்துநிலை
என்பது ஒரு சாகசம்.
கட்டுப்பாட்டில் இருக்கும்
வரை பித்துநிலை என்பது ஒரு அற்புதமான
விஷயம். கட்டுப்பாட்டினை இழந்தாலோ அது
அசிங்கமாகிவிடும். அதுபோல, தெளிந்த
புத்தியும் அழகான விஷயம்தான், ஆனால்
முழுமையான நிதானத்துடன் இருந்தால்,
இறந்து போனவருக்கும் உங்களுக்கும் பெரிதாக
வித்தியாசம் ஒன்றும் இருக்காது. நீங்கள்
விரும்பியவற்றில், நீங்கள் விரும்பிய
போதெல்லாம் நுழைந்து, சாகசம் செய்யும்
ஆற்றல் உங்களுக்கு கிட்ட, உங்கள் மூலாதாரம்
உறுதியுடன் இருப்பது அவசியம்.
www.supremeholisticinstitute.com