Friday, March 8, 2019

How to see Real Eternal Sithars(Rishi's)

உண்மையிலேயே சித்தர்கள், சித்தர்கள்...என்கிறார்களே
இவர்கள் யார்? இவர்கள் உண்டென்றால் இவர்களைக் நாம்
காண்பது எப்படி?

நமது தமிழில் ஒரு விசேஷம் என்னவென்றால் அது சொல்லிலேயே பொருளைக்
கொண்டிருப்பதுதான்.

பாருங்கள் சித்தர், புத்தர், ஞானி இந்த சொல்லிலேயே அவர்களைப் பற்றிய விபரம் உள்ளது.

ஆம், சித்தம் தெளிந்தவன் சித்தன்.
புத்தி தெளிந்தவன் புத்தன்.
ஞானம் அறிந்தவன் ஞானி
பாருங்கள் வார்த்தையிலேயே விஷயங்கள்.

இதுதான் தமிழின் அற்புதம்.
சித்தம் தெளிந்ததனால் அவர்கள்
சித்தரானார்கள், நாம் பித்தம் நிறைந்தனால் பித்தர்கள் ஆனோம்.

சித்தம் தெளிந்த அவர்கள்
நிலையாமையை உணர்ந்தார்கள்.
அதனால் அவர்களுக்கு உலகின்
இயக்கநிலையின் உண்மை புரிந்தது. இந்த உலகின் ( பிரபஞ்சத்தின் )- பூமியின்
அருமையான ஆற்றல் என்ன தெரியுமா?

நீங்கள் ஒன்று தந்தால் அதனை உங்களுக்கு நூறாக திரும்பத்
தரும், ஒரு மாங்கொட்டை நட்டால்
எத்தனை மாம்பழங்கள்,
ஒரு நெல் வைத்தால் எத்தனை நெல்மணிகள்?

இந்த மாபெரும் உண்மையை கண்டறிந்தார்கள் சித்தர்கள்!

இதைப்போலவேதான் நாம் செய்யும் புண்ணியங்களும், பாபங்களுக்கும்.

ஒன்று என்பது ஒன்றுடன்
நிற்பதில்லை ஒன்று அதன் தன்மைக்கேற்ப இரண்டாகலாம், நூறாகலாம் ஏன் ஆயிரம் கூட
ஆகலாம் என நன்கறிந்தனர் சித்தர்கள். ஆகவேதான் அவர்கள் உலக வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் தீர்வு தந்தார்கள்.

ஏனென்றால் எதிர்வரும் காலங்களில் மனிதன் மன மமதை
கொண்டவனாக, தான் தெரியாத தையும் தெரிந்தவனாக
ஊருக்கு காட்டிக் கொள்பவனாக,
தான் கண்டதை செல்வம் பண்ணும் வழியில் தேர்ந்தவனாக, உண்மையை மறைத்து
தனக்கொரு நீதியும், மற்றவர் களுக்கு ஒரு நீதியுமாக உலா வருபவனாக வருவான் என்பதை அறிந்த சித்புருஷர்கள் தாங்கள் கண்டதையும், கொண்டதையும்,
செய்ததையும், செய்வதையுமே
மறைபொருளாக வைத்துள்ளார்கள்

மேலும் அவர்களின் பார்வையில்
இருந்து எதுமே தப்பாது.
ஆயிரக்கணக்கான சித்புருஷர்கள் வாழ்ந்த,இன்னும் வாழும் இவ்வுலகில் எங்கும் அவர்கள்
நிறைந்துள்ளார்கள்.

சித்புருஷர்களின் ஒரு விசேஷ அருங்குணம் என்ன வென்றால் நாம் அவர்களின் வழியை பின் பற்றினால் மிக மகிழ்ச்சியுடன்
நமக்கு எல்லாவிதமான நன்மை களையும் அள்ளித்தருவார்கள் நம்மை பின் தொடர்வார்கள்,
நம்மை பாதுகாப்பார்கள். ஆனால் நமது நிலையில் தவறான சிறு மாற்றம் கூட அவர்களை கோபப்பட வைத்துவிடும்,

ஒரு முறை நம்மீது கோபம் வந்தால் அதன்பின் என்ன செய்தாலும் அவர்களின் அன்பைப் பெறவே முடியாது. அதோடு நம் வாழ்வும் அதோகதியாகிவிடும்.

காரணம், அவர்கள் (சித்தர்கள்) உலகில் விதியின் கைகளில் மாட்டித் தவிக்கும் மனிதர்களை
எதன் மூலமாகவாவது கரை சேர்க்கவேண்டும் என்ற
எண்ணத்தினால் தன்னைக் கரைத்துக் கொண்டவர்கள்.

அதனால்தான் இன்னும் இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களை நம்பிச் சேர்பவர்களை கரைசேர்க்கிறார்கள்.அவர்களையே ஏமாற்றுபவர்களை
(ஏமாற்றுவதாக எண்ணி ஏமாறுபவர்கள்) அவர்கள்
அழிக்கிறார்கள்,

ஆமாம் சித்தர்கள் அழிக்கிறார்கள்.
அழித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை நம்பினவர்களை எந்த
சூழலிலும் கை விடுவதில்லை, கை
விட்டதும் இல்லை.கைவிடப்போவ தும் இல்லை. காரணம் அவர்கள் நமக்காக தன்னைக் கரைத்துக் கொண்டவர்கள்.

மருத்துவம், மாந்தரீகம், ஜோதிடம், வாழ்வியல் அத்தனையிலும் அவர்களின் பங்கு மகத்தானது.

அவர்களைக் காணவும், அவர்களுடன் சேரவும்,
அவர்களின் அன்பில் திளைக்கவும்,
அதியற்புதமான நிலைகளை அடையவும் மிக எளிமையான அவர்களின் மூல மந்த்ரம் ஒன்று உண்டு.

இதனை நல்ல தூய்மையான உள்ளத்துடன், மற்றவர்களுக்கு (எந்தவிதமான பலனும் எதிர் பாராமல்) உதவும் மனதுடன் இரவில் அவர்களை நினைத்து நூற்றிஎட்டு முறை மனமுருக
தினசரி சொல்லுங்கள் அவர்களின் தரிசனம் நிச்சயமாக கிடைக்கும்,

ஆனால் உங்களுடைய இந்த சாதனை முழுக்க முழுக்க பிறர் நன்மைக்காக மட்டுமே தான்
பயன்படவேண்டும்.
( அதாவது அவர்கள் உங்கள் மூலமாக உலக மக்களுக்கு நன்மைகள் செய்ய முயல்வார்கள்)

சித்புருஷர்கள் நமது உள் மனம் புரிந்தவர்கள், நிஜத்தில் ஒன்றும், செயலில் ஒன்றுமாக இறங்கி விடவேண்டாம். அப்படி இறங்கினால் உங்களைப்போல் "உன்மத்த நிலைக்கு"
 (#பைத்தியநிலை) ஆளாக்கி விடுவார்கள்.
மேலும் பரிசோதிக்க எண்ணி இறங்கவேண்டாம்.

உண்மையில் உலக நன்மைக்காக செயல்பட நினைப்பவர்கள் செய்யலாம். சாதிக்கலாம்,
பெரும் புகழ் பெறலாம்,உங்களுக்கு தெரியாத விஷயமே இருக்காது.

சித்புருஷர்களுக்கு தெரிந்ததெல்லாம்
உங்களுக்கும் தெரியவரும்.

#அந்த_மகா_மந்த்ரம்
" ஓம் சிங் ரங் அங் சிங் வசி வசி"

 இந்த மந்த்ரத்தை ஒரு சிறு இடைவெளி கூட இல்லாமல் தொடர்ந்து சொல்லி வந்தால் அந்த
மகாசித்புருஷர்களை நீங்களும் சந்திப்பீர்கள், சாதிப்பீர்கள், வாழ்க வாழ்க. பல்லாண்டு.

( "ஓம் சிங் ரங் அங் சிங் சர்வ சித்தர்களே வசி வசி சிவா" என குறைந்த பட்சம் 108 முறை இதை மனதில் நினைத்து தியானம் செய்யுங்கள்.

இந்த மந்திரத்தை உங்களுக்கு விருப்பமான சித்தரை நினைத்தும் தியானம் செய்யலாம்..அதாவது
"ஓம் சிங் ரங் அங் சிங் கோரக்கர் சித்தரே வசி வசி சிவா"...எனவும் தியானம் செய்யலாம்.) --------------------------------------------------
#ௐ_சிவயநம, #ௐ_சிவ_சிவ_ௐ.
------------------------ௐ-----------------------

No comments:

Post a Comment